Monday, November 21, 2011

நீயா - நானா கோபிநாத் அதிசயங்கள்

நீயா - நானா கோபிநாத்-க்கும் புதுக்கோட்டைக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு கேட்கிற ஆளா நீங்க?? - அவரும் நம்ம  ஊருக்காரருதானுங்கோ!
கோபிநாத்
 நீயா நானா கோபிநாத் என்று ஊர் உலகமே அறியப்பட்ட கோபிநாத்
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சந்திரன் - குமுதம் சந்திரன்
 தம்பதியினருக்கு மகனாக ஜூலை 4 - ம் நாள் 1975  வருடம் பிறந்தார்.
 இவருடைய சகோதரர் பெயர் பிரபு. படித்தது B.B.A . இவரடைய மனைவியின் 
பெயர் துர்கா கோபிநாத். இவருடைய குழந்தையின் பெயர் வெண்பா.

குடும்பத்துடன் 

கோபிநாத் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதயும் தாண்டி சிறந்த பேச்சாளர்,
சிறந்த சிந்தனையாளர், பத்திரிக்கையாளர் , எழுத்தாளர் என பல முகங்களில் 
தமிழர்களையும் தாண்டி உலக மக்களின் மனதில் நிற்கும் நல்ல முற்போக்கு
சிந்தனை உள்ளம் கொண்டவர். இதற்க்கு எல்லாம் சான்றாக விஜய் டிவியின்
நீயா நானாவில் அவரின் ஆளுமை திறனையும் , பேச்சு திறனையும் , ஒரு
முற்போக்கு சிந்தனைகளையும் காணலாம்.

நீயா நானா கோபிநாத் 

கோபிநாத் சிறந்த எழுத்தாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பது இன்னுமொரு சாதனை. அதற்க்கு சான்றாக எளிமையான உரைநடையில் அவர் எழுதிய புத்தகங்களே சாட்சி.
 1 . தெருவெல்லாம் தேவதைகள் 
 2 . ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க
 3 . நேர் நேர் தேமா

எழுத்தாளர் கோபி

இதையும் தாண்டி சமூகத்திற்க்கான குறிப்பாக இளைஞர்களுக்கான இவரின்
வேண்டுகோள்கள், சிந்தனைகள் மிகவும் முக்கியமானவை. 5 நிமிடம்
பேசினாலே எவரையும் ரசிக்க வைக்கவும், தான் சொல்ல வந்த விசயத்தை
 நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் துணிவும் கோபிநாத்துக்கு
அழகு சேர்ப்பவை. தமிழகத்தின் பல்வேறு கல்லூரி,பள்ளிகளில் மேடை ஏறி
அறிவு சார்ந்த கருத்தக்களை எடுத்து முன்வைப்பதில் தன்னுடைய பணியை சிறந்த முறையில் செய்து வருகிறார்.


தொலைக்காட்சியில் இவரை அடையாள படுத்திய நிகழ்சிகள் பல இருந்தாலும் அவரின் நீயா நானா அவரின் பெயருடன் இணைந்து விட்டது.
அவரின் பங்களிப்புகள் சில,

 1 . மக்கள் யார் பக்கம் 
 2 . சிகரம் தொட்ட மனிதர்கள் 
 3 . நடந்தது என்ன ... என நீண்டு கொண்டே போகிறது கோபியின் பங்களிப்பு.

 அது சரி.. இவ்வளவு பணிகளுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறான விருதுகளை வழங்கி சிறப்பித்து இருக்கிறார்கள்.

* American Government Invitation to participate in International Visitors Programme (2004)

* Young International award by "India Today" Magazine (2007)

* Best Anchor of the State by "Anandha Vikatan" (2007,2008)

* Invited for the International Health Conference, Sydney (2007)

* Outstanding Young Indian by Junior Chamber International(JCI)(2008)



இன்னும் மேன்மை பெற வாழ்த்துக்கள் கோபி சார்...



அடுத்த அதிசயத்தில் சந்திப்போம் ....
 

    


2 comments:

  1. நம்ம ஊர்க்காரவுக எல்லோரும் பெரிய பெரிய ஆளுங்களாத்தான் இருக்காக. உங்க ப்ளாக் பேரை ரொம்ப ரசிச்சேன். நம்ம ஊர்க்காரவுக நீங்கன்னு இன்னும் சந்தோஷமா இருக்கும்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.. ஆவி-ல உங்கள பத்தி படிச்சேன்.. வாழ்த்துக்கள்

      Delete