Friday, January 21, 2011

மாமன்னர் கல்லூரி அதிசயங்கள்

"மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி " - பெயருக்கேற்ற படி மன்னர் கால கட்டிட அமைப்பு முறை கொண்ட கல்லூரி . இதில் அதிசயம் என்னவென்றால் மன்னர் காலந்தொட்டே கல்வி வழங்கி வருதல் இக்கல்லூரியின் முக்கியமான சிறப்பாகும் .


தமிழ்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி.  இதற்குத் தற்போது வயது 125.  இந்தக் கல்லூரியில் நாவலாசிரியர் அகிலன் ,  முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் கல்வி பயின்றனர்.

"தமசோமா ஜோதிர்கமய "
=
“Darkness to Light”
=
"இருளிலிருந்து ஒளியை நோக்கி "


என்ற இந்த வாக்கியத்தை குறிக்கோளை கொண்டு இயங்கி வரும்.  இந்த கல்லூரியின் பெருமைகள் பல . பெரும்பாலும் கல்லூரியில்  தான் ஒவ்வொருவரின் வாழ்கையும் தொடங்கும்.


அந்த தொடக்கமாய் பலரின் வாழ்கையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்த இந்த கல்லூரியின் சாதனைகள் பல . இக்கல்லுரியின் மூலமாய் சாதனை படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்த சாதனையாளர்கள் பலர்.

மன்னர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கூடமாக இருந்த இந்த நிறுவனம் தற்போது தன்னாட்சி பெற்ற கல்லூரியாகத் திகழ்கிறது. தற்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணினி அறிவியல், வணிகவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், பொருளியல், உடற்கல்வி அறிவியல், கணிதவியல், இந்தி ஆகிய துறைகள் உள்ளன.


இவற்றில் ஆங்கில வழி, தமிழ்வழி என்ற இரு பிரிவுகளும் உண்டு. மொத்தம் 3000 மாணவர்கள் படிக்கும் இந்நிறுவனம் இருபாலர் படிக்கும் வசதிகள் கொண்டது. மேலும் மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக விடுதி வசதிகளும் உண்டு. மேலும் பல துறைகளில் பட்டமேற்படிப்பு உள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

இக்கல்லூரி முதலில் 1857 ம் வருடம் ஆங்கில பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது .பிறகு 1880 ம் வருடம் முதல் மெட்ராஸ் பல்கலைகழகம் கீழ் மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடத்தப்பட்டன . பின்னர் 1948 ம் வருடம் முதல் அரசு சார்ந்த கல்வி நிலையமாக அறிவிக்கப்பட்டது . பின்னர் 1982 முதல் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் கீழ் சார்ந்ததாக அறிவிக்கப்பட்டது .

இக்கல்லூரி 1998 ம் வருடம் முதல் தன்னாட்சி கல்லூரி எனஅறிவிக்கப்பட்டது. இக்கல்லூரி 13 துறைகளையும் , 3000 மாணவர்களையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இன்றும் இக்கல்லூரியில் தேர்தல் முறைப்படி நடத்தி மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் உள்ளது . இக்கல்லூரியின் தேசிய மாணவர் படை அமைப்பு பல இராணுவ வீரர்களையும், காவலர்களையும் இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துள்ளது .

இக்கல்லூரியின் சிறப்புமிக்க நூலகம் ஒன்று இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்டு ,பின்னர் மீண்டு அதே கட்டமைப்பை கொண்டு அழகிய பொலிவுடன் அணைத்து மாணவர்களையும் அரவணைக்கிறது. இந்நூலகத்தில் மிகவும் பழைய காலத்து புத்தகங்கள் , மிகவும் அரிய புத்தகங்களும் மிகவும் அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது .

இதே கல்லூரியில் மூன்றாண்டு காலம் படித்து (இல்லை) கல்லூரி வாழ்கையை அனுபவித்து , எனது வாழ்க்கைக்கு குறிக்கோளை உருவாக்கி தந்த இந்த கோவிலுக்கு எனது நன்றிகளை என்றும் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். 


அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்.......
ரசிகா.............

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment