Thursday, June 9, 2011

அஞ்சல் தலை அதிசயங்கள்

அஞ்சல் துறை :
    ஒரு காலத்தில் அஞ்சல் துறை என்பது வெகு சிறப்பாக இயங்கி
வந்த, இன்றும் இயங்கி வரும் சிறப்பான துறை ஆகும் . இந்த துறை மக்களுக்கான வர பிரசாதமாகும் .
                             
             தற்போது அலைபேசி ,இணையம் என் அறிவியல் வளர்ச்சி கண்டாலும், இந்த அஞ்சல் துறையானது என்றும் அழியாத ஒன்றாகும் .  மக்களின் தொலை தூர தொடர்புகளின் உயிர் நாடியாக இது செயல் படுகிறது .

       மனிதனின் பிறப்பு ,இறப்பு , காதல் , கல்யணம்  என ஒவ்வொரு
நிகழ்ச்சியிலும் பிரிக்க முடியாத ஒரு பந்தத்தை கொண்டுள்ளது எந்த அஞ்சல் துறை.
                                                           
            இந்த அஞ்சல் துறை எண்ணற்ற வகையில் அஞ்சல் தலைகளை கொண்டு இயங்கி வருகிறது .  நாம் இந்த பதிப்பில் புதுக்கோட்டை மாகாணத்திற்கு என்று இயங்கி வந்த தபால் தலைகளை பற்றி காணலாம் .

                                                  
            அஞ்சல் தலைகள் ஒவ்வொன்றும் தனி தனி பண மதிப்பேடு கொண்டு அச்சிடப்படும். பழைய காலங்களில் ஒரு அணா,  அரை அணா போன்ற மதிப்பீடு கொண்டு அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளை புதுகோட்டையில் பயன் படுத்தி உள்ளதை காணலாம்
                                                               
             ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாகாணதிர்கென்றும் தனி தனி அஞ்சல் தலைகள் அச்சிடப்பட்டு அக்கால அரசர்களின் தலை பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது நாம் காணும் இந்த அஞ்சல் தலைகளில் இருந்து அறியப்டுகிறது.


                                                                
               அஞ்சல் தலைகள் என்பது பல கவிஞர்களின் காதல் கவிதைகளில் முக்கியத்துவம் பெறுகிறது .. அதில் ஒரு கவிஞரின் சிந்தனயில் ....
                                     காதலியே
                                    இனி அனுப்பும் கடிதங்களுக்கு
                                     தபால் தலை ஒட்டாதே !
                                     உன் இதயம்
                                     சுமந்து வரும் கடிதங்களுக்கு
                                      அவர்கள் ஓங்கி குத்துவதை
                                       தாங்கி கொள்ள முடியவில்லை !
                                                                 ---- கார்த்திக்

 காதலில் பெரும் சகாப்தத்தை உண்டாகிய இந்த தபால் தலைகள்..
 வரலாற்றில் பெரும் சாதனையின் சின்னமாக கருதபடுகிறது.  யாரேனும் ஒருவர் பெரிதாய் சாதனை செய்து விட்டால் அவரின் முகம் கொண்ட தப்பால் தலைகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 ஏனென்றால்,  என்றும் அழியாதது இந்த துறை தான் என்பதை மனிதன்
  அறிந்துள்ளான் ....

                                               
                 புதுக்கோட்டையில் பிறந்து சினிமா துறையில் சாதித்து தபால் தலையில் என்றும் சிரிக்கும் காதல் மன்னன் உங்கள் கண்ணுக்கு...
            அதிசயங்கள் தொடரும் .... அடுத்த பதிப்பில் சந்திப்போம்... உங்களது மறுமொழிகளை வரவேற்கிறேன் ....              

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment