Saturday, November 19, 2011

பேரையூர் அதிசயங்கள்

நமது மக்களின் தொன்மையையும், பழமையையும் உலகிற்கு
எடுத்துக்காட்டும் புதுக்கோட்டையின் அதிசயங்களில் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது பேரையூர்  பற்றிய ஒரு பதிவு .

கோயிலின் கோபுரம்
பெயர்காரணம்: 

பேரையூர் , புதுக்கோட்டைலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ள அழகான அதிசயங்கள்
 நிறைந்த ஊர்.  பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது.

இங்கு அமைந்துள்ள நாகநாதர் கோவில் புகழ் பெற்று விளங்கும் தளம்.
இந்த தளமானது அதிசயங்கள் நிறைந்தும், அதிக சக்தி வாய்ந்த தளமாகவும்
மக்களடத்தில் கருத்து நிலவி வருகிறது.  அதை மெய்பிக்கும் வகையில்
 கோயிலை சுற்றிலும் ஆச்சர்ய பட வைக்கும் ஆயிரகணக்கான நகத்தின்
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் நினைத்தது நடந்தது என
மக்களால் நேத்திகடன் திருப்பி செலுத்தப்பட்ட நாகத்தின் சிலைகள்.

குளத்தை சுற்றிலும் நாகத்தின் சிலைகள்

 இனி இதன் வரலாற்றை பார்ப்போம்...

நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார்.
நகநாதருக்கு பால் அபிஷேகம்
நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதயுகத்திலே நான்¬முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோயில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய பெரும்தலம். நாகராஜன் பணிந்தேத்தும் திருத்தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.

இசை ஒலிக்கும் குளம்
கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது. கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள் உள்ளன. இரு வாசல்களிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன.


குளத்திலிருந்து இசை கேட்கும் அதிசயம்: 

பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன. அங்கே சென்றால் ¬முதலில் காணப்படுவது "ஓம்' என்னும் வடிவில் அமைந்துள்ள புஷ்கரணி. இந்த புஷ்கரணி புண்ணிய புஷ்கரணியாகும். இது ஒரு சுனைநீர் ஆகும். இதிலிருந்து சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இச்சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த ¬முழக்கம் கேட்பதில்லை.
(நன்றி : ஹோலிஇண்டியா)

நாகபிரதிஷ்டை
இங்கு வந்து பிரதிஷ்டை செய்தால்(ஓமம் வளர்த்து பூஜை செய்தல்)
ஆறு வகையான தோஷங்கள் நீங்குவதாக மக்களால் நம்பபடுகிறது.
 1 . நாகதோஷம்
 2 . கலஷர்பதோஷம்
 3 . மாங்கல்யதோஷம்
 4 . புத்திரதோஷம்
 5 . சர்ப்பதோஷம்
 6 . ராகு கேது தோஷம்.

மேலும் சங்கு அபிஷேகமும் சிறப்பான பூஜையாக இங்கே நடத்தபடுகிறது.
இங்குள்ள நம்பிக்கைகளையும் தாண்டி அங்குள்ள நாக சிலைகளை
பார்த்தாலே பிரமித்து நிற்பது நிஜம்.
  
பேரையூர் நாகநாத சாமி கோயிலை சுற்றுலா மையமாக்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது .


மேலும் பல தகவல்களுக்கு:
www.peraiyurtemple.yolasite.com

அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment