Tuesday, May 31, 2011

ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான குதிரை சிலை அதிசயங்கள்

          " ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான குதிரை சிலையை
கொண்ட அதிசயம்  வாய்ந்த கோவில் தான் குளமங்கலம் ஸ்ரீ பெருங்கரயடி மீண்ட அய்யனார் "


                                                  புதிய கம்பீரத்துடன் 

குளமங்கலம் ஸ்ரீ பெருங்கரயடி மீண்ட அய்யனார் அதிசயங்கள்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் குளமங்கலம்
என்ற கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மிகவும் பழமை
வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ பெருங்கரயடி மீண்ட அய்யனார் கோவில் .


                                                                      (பழைய படம் )

 இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அய்யனார் மிகவும் சக்தி
கொண்ட தெய்வமாகவும்,  இதன் வரலாறு மிகவும் சிறப்பு
 வாய்ந்ததாகவும் இப்பகுதி மக்களிடத்தில் சொல்லப்படுகிறது .

 கோவில் உருவான வரலாறு:

முன்னொரு காலத்தில் குளமங்கலம் அசுவினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வயல்வெளிகளில் விவசாயம் சிறப்பாக நடைபெற்றதாக சொல்லபடுகிறது.  இவ்வயல்வெளிகளில் அறுவடை முடியும் காலத்தில் இவ்வூரை சேர்ந்த சிறுவர்கள் ஆடு மாடுகளை கொண்டு வந்து வயல் வெளிகளில்  மேய்ப்பது வழக்கம்.



அப்படி மேய்த்துக்கொண்டு வயல்வெளிகளில் நடக்கும்
தருணங்களில் வயல்வெளிகளில் சிதறி கிடக்கும் நெற்கதிர்களை
பொறுக்கி சென்று அனனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலிட்டு
சாப்பிட்டு விளையாடுவது வழக்கமான கிராமத்து பொக்கிஷம்.

          இதே போல ஒரு அறுவடை காலத்தில் சிறுவர்கள் அனைவரும்
சேர்ந்து நெற்கதிர்களை பொறுக்கி வந்து , ஒரு காரை மரத்தடியில்
( கிராமங்களில் காட்டு பகுதியில் காணப்படும் சிறு காய்களை
காய்க்கும் ஒரு வகை செடியைபோல் தோற்றமளிக்கும் மரம்)
அடுப்பு வைத்து பொங்கலிட்டு  இஷ்ட தெய்வத்திற்கு படயளிடுவதை
போல் விளையாடுவது என முடிவு செய்தனர் சிறுவர்கள் .



            கிராமபுறங்கள் என்றாலே பெரிய மீசை கொண்டு ஆளுயர
அரிவாளை ஏந்தி ஊரை காவல் காக்கும் அயானாரைதான் ஞாபாகம்
வரும் பலருக்கும். இந்த கோவில்களில் நடக்கும் ஆடு பலியிடும் திருவிழாவை கண்டு பழக்கப்பட்ட, அந்த ஆடு மேய்க்கும் சிறுவர்களும் விளையாட்டில் தங்களுடைய ஆட்டையும்  படையல் முன் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு களிமண்ணால் செய்த கத்தியால் வெட்டி விளையாடுவது என முடிவெடுத்தனர் .



          பொங்கலிட்டு காரை மரத்தின் கீழ் படையல் இடப்பட்டது .
ஆடு கொண்டு வந்து படையல் முன் நிறுத்தப்பட்டது . அதில்
ஒரு சிறுவன் களிமண்ணால் செய்து காயவைக்கப்பட்ட கத்தியை
எடுத்து வந்து , கோவில் பூசாரிபோல சாமி ஆடி நடித்து விட்டு
களிமண் கத்தியால் ஆட்டின் தலையில் வெட்ட தலை தனியாய்
சென்று படையலில் விழுந்தது .

           இதை பார்த்த அனைத்து சிறுவர்களும் பயத்துடன் ஊரை
நோக்கி ஓடினர். ஊரில் சென்று பெரியார்களிடம் செய்தியை
சொல்லி கதற நம்ப மறுத்த பெரியவர்கள் வயல் சென்று பார்த்தவர்கள்
அசந்து போயினர். களிமண்ணால் செய்த கத்தியால் ஆட்டின் தலை
துண்டித்து கிடந்த காட்சி அதிசயமாய் தோன்றினாலும் , மக்களுக்கு
பயத்தையும் உண்டாகியது .

                                                  (தெப்ப திருவிழாவின் போது)

         பின்னர் ஊர்மக்கள் அனைவரும் இணைந்து ஊர் சாமியாடி
ஒருவரிடம் குறி கேட்க , அங்கே அய்யனார் எழுந்தருலிருப்பதாக சொல்லிருக்கிறார்.  இந்த அய்யனார் காரை மரத்தடியின் கீழ்
எழுந்தருளியதால் ஸ்ரீ பெருங்கரயடி மீண்ட அய்யனார் என பெயர்
பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது .



       பிற்காலத்தில் அந்த காரை மரத்தை மையமாக கொண்டு
கோவில் கட்டப்பட்டதாகவும் , அந்த கோவிலின் முன்னால்
ஒரு குதிரை சிலையும், ஒரு யானை சிலையும் கட்டப்பட்டதாக
 தகவல். ( மேலும் அந்த சிலைகளை வடிவமைத்தவர்கள் கண்
 பார்வை அற்றவர்கள் என்பது உதிரி தகவல் )

                அதற்கு பிற்காலத்தில் வந்த வெள்ளத்தில் யானை சிலை
 அடித்து செல்ல பட்டதாக சொல்லபடுகிறது. தற்பொழுது  குதிரை
 சிலை புதுப்பிகப்ட்டு புதிய கம்பிரதுடன் காட்சி அளிக்கிறது .


குடமுழுக்கு :
              எல்லா தெய்வங்களை போலவும் இந்த அய்யனாரும்
பல அதிசயங்களை  நிகழ்த்தியதாக ஊர் மக்கள் மத்தியில் 
சொல்லப்படுகிறது . இவைகளை எல்லாம் விஞ்சும் வகையில்,
தற்பொழுது அமரர் வெங்கடாசலம் தலைமையில் இத்திருக்கோவில் புதுபிக்கப்ட்டு குடமுழக்கு விழா மிக கோலாகலமாய் நடந்தது .
           

இந்த குடமுழக்கு விழாவில் கலந்து கொண்ட பல லட்சம் மக்களே
இந்த தெய்வம் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு சான்று என்று கோவிலை
சார்ந்த ஊர் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர் .
  
திருவிழாக்கள் :
                  இத்திருகோவிலில் மாசிமக நாளில் பல்லாயிரகணக்கான
மாலைகள் குதிரைக்கு  நேத்தி கடனாக அணிவிக்கப்டுகிறது .அன்றைய மறுதினம் இரவு தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடத்தபடுகிறது.



                 இந்த திருவிழா காலங்களில் காளையர்களின் ஆட்டமும் , கன்னியர்களின்  கூட்டமும் திருவிழாவிற்கு அழகு சேர்க்கிறது .

அடுத்த பதிவில் சந்திப்போம்....மீண்டும் ஒரு அதிசயத்துடன் .........