" தம்பி ராமையா " - நீண்ட போராட்டத்திற்கு பிறகு நல்லதொரு அங்கிகாரம் பெற்ற கலைஞன். மைனா படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் என்னும் தேசிய விருது பெற்றவர். நம்ம ஊர்க்காரர்.
இவரின் சொந்த ஊர் திருமயம் அருகே உள்ள ரா.ரா.புரம். இவரின் துணைவியாரின் பெயர் பொன்னழகு. இவருக்கு கவிதா,விவேகா என்ற இருகுழந்தைகள். கண்ணதாசன் மேல் கொண்ட காதலால் ஹோட்டலில் பார்த்து கொண்டிருந்த மேலாளர் பதவியையும் விட்டுவிட்டு சினிமா மேல் காதல் கொண்டு பாடல், இசை என்னும் இரு துறைகளை தேர்ந்தெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தார்.
சினிமா மேல் கொண்ட ஆர்வ மிகுதியால் தேர்ந்தேடுந்த துறைகளையும் மீறி
நடிகர் , இயக்குனர் என்ற அவதாரம் எடுத்தார். 'மலபார் போலீஸ்' என்னும் படம் முலம் தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர் , 'மனுநீதி ' என்னும்
படத்தின் மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
அதன் பிறகு 30 படங்களுக்கு மேல் பணியாற்றி வந்தாலும் 2010 அவருக்கு ஒரு
திருப்பு முனையாகவே இருந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் , இது ஒரு உண்மயான திராவிடர்கள் படம் என சூப்பர் ஸ்டாரால் பாரட்டப்பட்ட "மைனா"
படத்தின் மூலம் இந்திய சினிமாவால் சிறந்த குண சித்திர நடிகர் என தேசிய
விருது என்னும் கிரிடம் கொண்டு அலங்கரிக்கபட்டார்.
தன்னுடைய எளிமையான பேச்சால் அனைவரையும் கவரும் தம்பி ராமையா அவர்கள் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மைனா படத்துக்கான குண சித்திர நடிகருக்கான விருதுடன் பேசியது சிலிர்க்க வைத்தது. "தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த 45 வயதை தாண்டிய கலைஞனுக்கு வெற்றி என்பது ஒரு பொருட்டு அல்ல." என்ற வார்த்தையை உதித்த பண்பட்ட மனிதர்.
மேலும் தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் 'கழுகு'
படத்தில் சித்து என்ற வேடத்தில் சிறப்பாக நடித்து ஊர் உலகத்தையே கலக்கி
கொண்டிருக்கிறார் மனிதர்.
கூடுதல் செய்தியாக , தம்பி ராமையா அவர்கள் "தாய்மடி" என்ற அறகட்டளை தொடங்கி ஏழை மக்களுக்கு உதவ போவதாக அறிந்தேன். அய்யாவின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்...
தம்பி ராமையா |